2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மூன்றாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக நியூசிலாந்து முன்னிலை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போட்டியை வெளிப்படுத்தியுள்ளது, எனினும் நியூசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகிறது.
 
2 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
அவ்வணி சார்பாக ஷிவ்நரின் சந்தர்போல் 76 ஓட்டங்களையும், டெரன் பிராவோ 40 ஓட்டங்களையும், டெரன் சமி ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதி 4 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட்ற் 3 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
 
இதனபடிப்படையில் பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
 
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக டெரன் பிராவோ ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும், கேர்க் எட்வேர்ட்ஸ் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரென்ட் போல்ட்ற், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 609 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--