2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஹைதராபாத் சன் ரைசேஸ் அணியின் தலைவராக ஷிகார் தவான்

Super User   / 2014 மார்ச் 26 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைதராபாத் சன் ரைசேஸ் அணியின் தலைவராக ஷிகார் தவான் அறிவிக்கப்பட்டுளார். இதேவேளை மேற்கிந்திய தீவுகள் 20-20 அணியின் தலைவர் டர்ரென் சமி உப தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  2013 ஆண்டு  சம்பியன் லீக் தொடரில் ஷிகார் தவான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு தொடரின் ஆரம்பத்தில் குமார் சங்ககார தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கமரூன் வைட் உம்  அணித்தலைவராக கடமையாற்றி இருந்தார். ஷிகார் தவான் இந்தியாவின் மூன்று வித அணிகளிலும் நிரந்தர இடம் பிடித்துள்ளதோடு சிறப்பாக செயற்பட்டு வருகின்றமையும் அவரின் இந்த தலமைப் பொறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .