2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

யுவராஜுக்கு ஆதரவாக சச்சின்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் காரணம் என்ற விமர்சனங்கள் ஊடங்களிலும் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "யுவி! மோசமான ஒரு நாள், கடந்த காலங்களில் செய்த இனிமையான நினைவுகளை அழித்து விடாது. இன்று நீ வீழ்ந்து இருக்கலாம். ஆனால் வெளியேறும் காலம் வெகு தொலைவில் உள்ளது" என தன் கருத்துகளை பதிவிட்டுள்ளார். என்னை விரும்பும் பலர் இந்தியாவிலும் உலகிலும் உள்ளனர். அவர்கள் யுவராஜ் 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதை விரும்புகின்றனர் என்று பதிவிட்டுள்ள சச்சின், ரசிகர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். "யுவிக்கு ஒரு மோசமான நாள் அது. அவர் விமர்சிக்கபடலாம். ஆனால் இல்லாதொழிக்கப்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது" என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். 

யுவராஜ் சிங்கை நான் விளையாட்டிலும் விளையாட்டுக்கு வெளியேயும் பார்த்துள்ளேன். சவால்களை வென்று வரும் ஒருவர் அவர். இந்த சவாலையும் முறியடித்து வருவார் என நம்புகின்றேன் என அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் மீது பழி போட வேண்டாம் என போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய அணித்தலைவர் டோனி கூறியிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .