2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விஸ்டன் சஞ்சிகை சச்சினுக்கு கௌரவம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட்டின் பைபிள் என கூறப்படும் விஸ்டன் சஞ்சிகை தமது 151 வது பதிப்பில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்ச்சத்திரம் சச்சின் டெண்டுல்காரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பாக இவ்வாறன கௌரவம் வழங்கப்பட்ட முதல் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இந்த கௌரவம் சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டின் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை விஸ்டன் சஞ்சிகை பட்டியலிட்டுள்ளது. இந்திய அணியின் சிகார் தவான், ஆஸ்திரேலியா அணியின் ரயன் ஹரிஸ் மற்றும் க்றிஸ் ரொஜெர்ஸ், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இங்கிலாந்து மகளிர் அணியின் சார்லெட் எட்வேர்ட்ஸ் ஆகியோர் பட்டியளிடப்பட்டுள்ளனர். இதேவேளை தென் ஆபிரிக்க அணியின் டேல் ஸ்டைன் கடந்த வருடத்தின் முன்னணி கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

விஸ்டன் சஞ்சிகையின் விருதுகள் உயரிய விருதுகளாக வீரர்களாலும், மக்களாலும் மதிக்கப்படுகின்றன. 1889 ஆம் ஆண்டு சிறந்த வீரர்களுக்கான விருதுகளை விஸ்டன் பெயரிட்டது. இதேவேளை 2000 ஆம் ஆண்டு நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக சேர் டொனால்ட் பிரட்மன், சேர் காபில்ட் சோபர்ஸ், சேர் ஜக் ஹோப்ஷ், ஷேன் வோர்ன், சேர் விவியன் ரிச்சட்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .