2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி பதவி விலகல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சசிகலா ஸ்ரீவர்த்தினி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியின் தலைவியாக சசிகலா ஸ்ரீவர்த்தினி கடமையாற்றி வந்தார். உலக 20-20 தொடரில் இலங்கை அணி எட்டாமிடத்தைப் பெற்ற நிலையில் ஸ்ரீவர்த்தினி பதவி விலகியுள்ளார்.

இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக ஸ்ரீவர்த்தினி இருந்து வருகின்றார். இந்த வருடம் அணியுடன் நடைபெறவுள்ள உலக மகிளிர் அணியில் இவர் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி சார்பாக உலக அணியில் இடம் பிடித்துள்ள முதல் வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .