2025 ஜூலை 02, புதன்கிழமை

டெல்லி அணிக்கு முதல் வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி டெயார் டெவில்ஸ் அணிக்கும் கொல்கொத்தா ரைடேர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொபின் ஊத்தப்பா  55(41 பந்துகள், 4 ஓட்டங்கள் 6 , 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், மானிஷ் பாண்டி 48 (42 பந்துகள், 4 ஓட்டங்கள் 6) ,சகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 30 (22பந்துகள், 4 ஓட்டங்கள் 2 , 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நேதன்  கொள்ட்டர்  நைல் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக்  கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் 56 (40 பந்துகள், 4 ஓட்டங்கள் 5 , 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும், டுமினி ஆட்டமிழக்காமல் 52 (35 பந்துகள், 4 ஓட்டங்கள் 3 , 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக டுமினி தெரிவு செய்யபட்டார்.

 

டெல்லி டெயார் டெவில்ஸ்  அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ள அதேவேளை கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .