2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

குத்துச்சண்டை வீராங்கனை தடை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 22 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு கிடைத்த வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிட்டா தேவி மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களையும் சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் தடை செய்துள்ளது. 
 
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டைப் போட்டியின் அரை இறுதிப்போட்டியில் சரிட்டா தேவிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்ததாக கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, பதக்கம் வழங்கும் நிகழ்வில் பதக்கத்தை ஏற்க்க மறுத்தார் சரிட்டா தேவி. எனவே இந்த செயற்பாட்டுக்கான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக இந்த வருட இறுதியில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள உலக குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டிகளிலும் சரிட்டா தேவி பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .