2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சுப்பர் கிண்ணத்தை வென்றது பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று கோல்கள் முன்னிலையிலிருந்த பார்சிலோனா அணி, மாற்றுவீரராக களமிறங்கிய பெட்ரோ மேலதிக நேரத்தில் பெற்ற கோலின் மூலம் 5-4 என்ற கோல்கணக்கில் மயிரிழையில் செவில்லாவை தோற்கடித்து ஐரோப்பிய சுப்பர் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்தப்போட்டிக்கு முதல் பெட்ரோ கழகத்திலிருந்து வெளியேற விரும்புவதாக பார்சிலோனா தெரிவித்தபோதும், 2009ஆம் ஆண்டை போலவே அணிக்குள் இறுதியாக வந்திருந்த பெட்ரோ, மெஸ்ஸி அடித்து திரும்பி வந்த பந்தை கோலாக்கியிருந்தார்.

ஆட்டம் ஆரம்பித்து 3வது நிமிடத்திலேயே ஐரோப்பிய லீக் வெற்றியாளர்களான செவில்லாக்கு கிடைத்த பிறீகிக் மூலம் எவர் பனீகா ஒரு கோலினைப்பெற்று தனது அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும் 7வது, 16வது நிமிடங்களில் கிடைத்த பிறீகிக் வாய்ப்புக்களை பயன்படுத்தி கோலாக்கி மெஸ்ஸி ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்து தனது அணியை 2-1 என்ற நிலையில் முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ரஃபின்கா,லூயிஸ் சுராஸ் கோல்களை பெற முதற்பாதி முடிவில் பார்சிலோனா அணி 4:1 என்ற நிலையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் 57வது நிமிடத்தில் ஜோஸ் அந்தோனியோ ரெயிஸ் பெற்ற கோல், 72வது நிமிடத்தில் கிடைத்த பனால்டி மூலம் இன்னொரு கோலைப் பெறவும், ஆட்டநேரத்துக்கு 10 நிமிடமிருக்கையில் யெவ்கென் கொநோப்ல்யங்கா பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமமாகியிருந்த நிலையிலேயே போட்டி மேலதிக நிமிடத்துக்கு சென்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .