2021 மார்ச் 03, புதன்கிழமை

நடால், முரே முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொன்றியலில் நிடைபெறும் ரோஜெர்ஸ் கிண்ணத்தில் அன்டி முரே, ரஃபேல் நடால் ஆகியோர் இரண்டாம் சுற்றில் வெற்றியடைந்துள்ள போதிலும், கிண்ணத்தை வெல்லுவார்கள் எதிர்பார்க்கப்பட் ஆறு பேர் வெளியேறியுள்ளனர்.

பை அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு வந்த பிர்த்தானியாவின் அன்டி முரே 6-4,7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டொமி ரொப்ரெடோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 ஸ்பெயினின் நடால் 7-6,6-3 என்ற செட் கணக்கில் உக்ரேனின் செர்ஜி ஸ்டக்கொவஸ்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-3,6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பப்லோ அன்டுஜாரை வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கிண்ணத்தை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பிரான்சின் கயேல் மொன்பில்ஸ், செக் குடியரசின் தோமஸ் பேர்டிச், குரோஷியாவின் மரின் சிலிக், கனடாவின் மிலோஸ் ரஓனிக், பிரான்சின் கைல்ஸ் சைமன், பல்கேரியாவின் கிரிகோர் டிமிற்றோவ் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம் பெண்கள் பிரிவில் கரோலின் வொஸ்னியாக்கி, பெட்ரா கிவிட்டோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளவேளை சிமோனா ஹல்ப் வெற்றிபெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .