Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி. சரா ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 413 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, வெற்றிபெறுவதற்கு அவ்வணிக்கு இன்னமும் 341 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக, ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.
இந்திய அணி சார்பாக அஜின்கியா ரஹானே 126 ஓட்டங்களையும் முரளி விஜய் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பாக தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இலங்கை சார்பாக தனது இறுதி சர்வதேசப் போட்டியில் பங்குபற்றிவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, நேற்றைய தினம் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது.
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025