Super User / 2011 மார்ச் 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்து அணியுடனான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 231 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஓட்டங்களின் அடிப்படையில் உலக கிண்ணப்போட்டி வரலாற்றில் நான்காவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
மொஹாலியில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ஓட்டங்களைக் குவித்தது. டி வில்லியர்ஸ் 126 பந்துகளில் 131 ஓட்டங்களையும் ஹஸிம் அம்லா 113 ஓட்டங்களையும் பெற்றனர். ஜோன் போல் டுமினி 15 பந்துகளில் 40 ஓட்டங்களைப்பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 34.5 ஓவர்களில் 120 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் இம்ரான் தாஹிர் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜக் கலிஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டி வில்லியர்ஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
37 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
53 minute ago
54 minute ago