Super User / 2011 ஜூன் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்திய – மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 246 ஓட்டங்களையும் மேற்கிந்திய அணி 173 ஓட்டங்களையும் பெற்றன.
ஜமைக்காவின் சபீனா பார்க்கில் ஆரம்பமான இப்போட்டியில் இந்திய அணி சார்பில் சுரேஷ் ரெய்னா 82 ஓட்டங்களைப் பெற்றார். ஹர்பஜன் சிங் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
முதல்நாளன நேற்று முன்தினம் ஆட்டமுடிவின்போது மேற்கிந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது நாளான நேற்று அவ்வணி 173 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அட்ரியன் பாரட் 64 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியின் சார்பில் வேறு எவரும் அரைச்சதத்தை நெருங்கவில்லை. கார்ல்டன் போஹ் 27 ஓட்டங்களைப்பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிரவீன் குமார் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்பஜன் சிங், அமிட் மிஸ்ரா இருவரும் தலா 51 ஓட்டங்களைக் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனது இரண்டாவது இன்னிஸ்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆட்டமுடிவின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ராகுல் திராவிட் 45 ஓட்டங்களுடனும் வீரட் கோலி 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago