2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணிக்கு 274 ஓட்ட இலக்கு

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அவ்வணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 274 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 356  ஒட்டங்களையும் பாகிஸ்தான் அணி 376 ஓட்டங்களையும் பெற்றன.

போட்டியின் 3 ஆவது நாளான நேற்று திங்கட்கிழமை ஆட்டமுடிவின்போது நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காவது நாளான இன்று அவ்வணி 293 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட  வீரர்களான மார்ட்டின் குட்பில் 73 ஓட்டங்களையும்  பிரெண்டன் மெக்கலம் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் தவிர ரோஸ் டெய்லர் மாத்திரமே அரைச்சதம் (52) பெற்றார்.

பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களில் உமர் குல் 61 ஓட்டங்களுக்கு4  விக்கெட்டுகளையும்  அப்துர் ரஹ்மான் 119 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொஹமட் ஹாபிஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .