Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 08 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூஸிலாந்தின் ஹமில்டன் நகரில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நேற்றைய ஆட்டமுடிவின் போது நியூஸிலாந்து அணி 7விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை காலை மேலும் 15 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இறுதி மூன்று விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து அணி பறிகொடுத்தது.
பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களில் தன்வீர் அஹமட் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அப்துர் ரஹ்மான் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் உமர் குல் 84 ஓட்டங்களுக்;கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி இன்று தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோது, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஹாபீஸ் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
எனினும் ஏனைய வீரர்கள் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியதால் ஆட்டமுடிவின்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் எனும் நிலையை அடைந்தது.
தௌபீக் உமர் 54 ஓட்டங்களையும் அஸார் அலி 24 ஓட்டங்களையும் யூனிஸ்கான் 24 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
மிஸ்பா உல் ஹக் 50 ஓட்டங்களுடனும் அஸாட் ஷாபிக் 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறிஸ் மார்ட்டின், பிரென்ட் ஆர்னல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
5 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago