2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் நிந்தவூர் மாணவனுக்கு 3 தங்கப்பதக்கங்கள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் கமு/அல் மதீனா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் செய்னுலாப்தீன் முஹமட் ஆசிக்  3 தங்கப் பதக்கங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைக்களுக்கு இடையிலான 19 வயத்துக்குட்பட்டவர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பரிதி வட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் முஹமட் ஆசிக் முதலிடங்களைப் பெற்றுள்ளார்.

செய்னுலாப்தீனையும் பயிற்சி ஆசிரியர் நசீரையும் பாராட்டிக் கௌரவிக்கும் விழாவொன்றை நடத்தவிருப்பதாக அல் மதீனா ம.வி.அதிபர் எஸ்.அகமட் தெரிவித்தார்.


முஹமட் ஆசிக், அதிபர், ஆசிரியர்கள் அழைத்து வரப்படுவதை படத்தில் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .