2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் அணிக்கு 451 ஓட்ட இலக்கு

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துபாயில் நடைபெறும் தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 451 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்நிலையில் போட்டியின் நான்காவது நாளான இன்றைய ஆட்டமுடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 380 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 248 ஓட்டங்களையும் பெற்றன. மூன்றாவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று அவ்வணி 2 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. ஜக் கலிஸ் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களையும் ஹஸீம் அம்லா ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி பெறுவதற்கு 452 ஓட்டங்கள் தேவையான நிலையில் பாகிஸ்தான் அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் ஹாபீஸ் 34 ஓட்டங்களுடனும் தௌபீக் உமர் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இன்றறைய ஆட்டமுடிவின்போது அவ்வணி 2 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அஸார் அலி 37 ஓட்டங்களுடனும் யூனிஸ்கான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

 பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 342 ஓட்டங்கள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .