2025 ஜூலை 09, புதன்கிழமை

இலங்கை - நியூசிலாந்து 5ஆவது போட்டி இன்று

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதற்போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. எனினும் அடுத்த 3 போட்டிகளையும் இலங்கை அணி வெற்றிகொண்டு தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆகவே இன்றைய போட்டியிலாவது நியூசிலாந்து அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. இத்தொடர் முழுவதும் காணப்பட்டது போன்று இன்றைய போட்டியிலும் மழையின் தாக்கம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இன்றைய போட்டியிலும் நாணய சுழற்சி முக்கியத்துவம் பெறும் எனவும் கருதப்படுகிறது. இன்றைய போட்டியின் முடிவு இத்தொடரின் நிலைகளில் மாற்றங்களைச் செலுத்தாது என்ற போதிலும் டெஸ்ற் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் டெஸ்ற் அணியில் நிரந்தர இடங்களைப் பெற்றுக் கொள்ளாத வீரர்கள் தங்களுக்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இன்றைய போட்டி காணப்படுகிறது.

இலங்கை அணி ஏற்கனவே தொடரை வெற்றிகொண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இளைய வீரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ஷமின்ட எரங்க, அகில தனஞ்சய இருவருக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:


இலங்கை: உபுல் தரங்க, மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, டினேஷ் சந்திமால், அன்ஜலோ மத்தியூஸ், லஹிரு திரிமன்ன, ஜீவன் மென்டிஸ், திஸர பெரேரா, ஷமின்ட எரங்க, அகில தனஞ்சய மற்றும் லசித் மலிங்க

நியூசிலாந்து:
பி.ஜே.வற்லிங், ரொப் நிக்கல், பிரென்டன் மக்கலம்,  ரொஸ் ரெய்லர், கேன் வில்லியம்ஸன், ஜேம்ஸ் பிராங்ளின், அன்ட்ரூ எலிஸ், நேதன் மக்கலம், கைல் மில்ஸ், ரிம் சௌதி மற்றும் ட்ரென்ட் போல்ட்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .