Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 19 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 ஆவது சதத்தை சற்றுமுன் பூர்த்தி செய்தார்.
சென்சூரியனில் நடைபெறும் தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் சற்றுமுன் 100 ஓட்டங்களைப் பெற்றார் டெண்டுல்கர்.
37 வயதான டெண்டுல்கர் பங்குபற்றும் 175 ஆவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் உலகில் அதிக சதங்களை குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் விளங்குகிறார். அவருக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் 39 டெஸ்ட் சதங்களையும் தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ் 38 சதங்களையும் பெற்றுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் நடைபெற்ற போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமான அவர் 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மன்செஸ்டரில் நடந்த போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Thilak Monday, 20 December 2010 01:30 AM
வாழ்த்துக்கள் சச்சின்
Reply : 0 0
Niththi Monday, 20 December 2010 01:32 AM
உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் சச்சின்தான்
Reply : 0 0
yarro oruvan Monday, 20 December 2010 05:51 PM
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் நேர்மையான ஒரு வீரன் என்பதை நிரூபித்துள்ளார் சச்சின்,
Reply : 0 0
suyen Tuesday, 21 December 2010 08:01 PM
world cricketil sachinthan hero enpathai menum mendum nirupithu kondu irukkum sachinukku valthukkal.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago