Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை குவிக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டார். வெறும் 6 ஓட்டங்களால் அவரின் 100 ஆவது சதம் கைகூடாமல் போனது.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 சதங்களையும் சச்சின் டெண்டுல்கர் குவித்துள்ளார். இன்னும் ஒரு சதம் பெற்றால் அது அவரின் 100 ஆவது சதமாக அமையும்.
ஆனால் கடந்த 8 மாதங்களாக பல போட்டிகளில் அவர் முயன்றும் சதம் குவிக்க முடியவில்லை.
இந்நிலையில் மும்பையில் நடைபெறும் மேற்கிந்திய அணியுடனான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் நேற்று 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் டெண்டுல்கர். இதனால் இன்று அவர் தனது 100 ஆவது சதத்தைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால், அந்த இலக்கை நோக்கி நிதானமாக முன்னேறிய டெண்டுல்கர் 94 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ராம்போலின் பந்துவீச்சில், செகன்ட் ஸ்லிப் பகுதியில் நின்ற டெரன் சமியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆரவாரத்துடன் காணப்பட்ட வாங்கேட அரங்கில், டெண்டுல்கர் ஆட்டமிழந்தவுடன் மயான அமைதி நிலவியது.
இறுதியாக கடந்த மார்ச் 12 ஆம் திகதி தென்னாபிரிக்காவுடனான உலகக்கிண்ண போட்டியின்போது சச்சின் சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 90 ஓட்டங்களை கடந்தபின் சதம் குவிப்பதற்கு முன் ஆட்டமிழந்தமை இது 10 ஆவது தடவையாகும். இவ்விடயத்தில் அவர் விரும்பப்படாத புதிய சாதனையொன்றை பiடைத்துள்ளார்.
ராகுல் திராவிட் மைக்கல் ஸ்லேட்டர் ஆகியோர் 9 தடவை கள் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி:
16 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
Dilan Friday, 25 November 2011 06:40 PM
சர்வதேச போட்டிகளில் 99 சதம் குவித்ததே சாதனைதானே.
Reply : 0 0
Kethis Friday, 25 November 2011 09:55 PM
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago