Niroshini / 2017 ஜூலை 19 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் தீர்வு சம்பந்தமான தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்காக, அவர்களுக்கு உதவ வேண்டும். அதேவேளை, அதற்கு சர்வதேசம் உரிய அழுத்ததைத் கொடுக்க வெண்டும் என்று, இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (18) மாலை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். இதன்போது, அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை மற்றும் வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பிலும், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதன் பின்னர், பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
“இச்சந்திப்பின் போது, அனைத்து விடங்கள் குறித்தும் பேசினோம். குறப்பாக, மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், கைதிகள், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதுடன், வாழ்வாதாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவது தொடர்பில், அவர்களது உதவிகளை நாடியிருக்கிறோம்.
“மேலும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்தி, விசேடமாக அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
“அரசியல் அமைப்பு சம்பந்தமாக பல விடயங்கள் குறித்து பேசினோம். அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு வர வேண்டும். நியாயமான அரசியல் தீர்வு வருவதன் மூலமாகவே, மக்களுடைய வாழ்வில் விமோசனம் ஏற்பட்டு மாற்றம் ஏற்படும். மேலும், அப்போதுதான், மக்கள் நம்பிக்கையோடும் சம உரிமையோடும் வாழக்கூடிய நிலைமை ஏற்படும் என அவரது கவனத்துக்கு கொண்டு வந்தோம்.
இதேவேளை, அரசியல் தீர்வு சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு இந்த விடயத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்களுடைய போட்டிகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இணைந்து செயற்பட வேண்டும். அவர்கள் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம். அவர்கள் இணைந்து செயற்படாது போனால், இந்தப் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது.
அதனால் அவர்களுக்கிடையே உள்ள போட்டியை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அவர்களுக்கு உதவ வேண்டும். அத்துடன், அதற்கு சர்வதேச சமூகம் உரிய அழுத்ததைத் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.
எமது கருத்துகளை கேட்டறிந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன், எமது கருத்துகளை ஏற்றுக்கொண்டார். எங்களுடைய பதிவுகளை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக தற்போது அதற்கான கருமங்கள் நடைபெற்றுக்கொ
ண்டிருக்கின்றன. அந்த கருமங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அது நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago