2019 ஒக்டோபர் 17, வியாழக்கிழமை

இன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றுக்காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனடிப்படையில், இன்றுமாலை 3 மணிக்கு வி​​சேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசமைப்பின் 20ஆவது திருத்த யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்பிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்தால், எதிர்வரும் 24ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறுமென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .