2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று(11) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரபத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டிடுவதுடன், அவர்களிலிருந்து 28 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

 உத்தியோகப்பூர்வ முடிவை இன்று இரவு 10 மணிக்கு முன்னர் வௌியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .