2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது விசனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலைமாறும்கட்ட நீதி தொடர்பான நிகழ்ச்சிநிரலை இலங்கையில், அதிகாரிகள் அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக மெதுவான நகர்வையே முன்னெடுக்கின்றனர் எனத்தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மைக்கேல் பசேல் ஜெரியா, இலங்கை தொடர்பிலான சில விடயங்கள் குறித்து, தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர், நேற்று (10) ஆரம்பமானது. அத்தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்தக் கூட்டத்தொடரில், நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றி ஆராயும் ஐ.நா பணிக்குழுவின் இலங்கை விஜயம் பற்றிய அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த பணிக்குழுவின் பிரதிநிதிகள், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அறிக்கை தயாரித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவிவகித்த,செயிட் அல்ஹுசைனின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அந்தப் பதவியை திருமதி மைக்கேல் பசேல் ஜெரியா, கடந்த 1ஆம் திகதி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் தன்னுடைய முதலாவது உரையை இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து நேற்று நிகழ்த்தினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இலங்கையில், அதிகாரிகள் நிலைமாறும்கட்ட நீதி தொடர்பான நிகழ்ச்சிநிரலை அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிக மெதுவாக நகரிலும், காணாமல் போனோர் அலுவலகம் அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கு கலந்துரையாடல்களையும் நிறுவன இயலாமை கட்டியெழுப்பும் முயற்சிகளையும் தொடங்கியுள்ளது” என்றார்.

இந்த அலுவலகம் விரைந்து வேலை செயற்படும் எனவும், காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு பதில்களை வழங்கத்தொடங்கும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம். பிராயச்சித்தத்துக்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்ட ஆக்க முயற்சிகளும் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

“பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல் என்பவற்றில் முன்னேற்றம் காணுதல் இலங்கையின் நீண்டகால உறுதிபாடு, செழிப்பு என்பவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இனவாத மற்றும் மீண்டும், மீண்டும் இடம்பெறும் இனரீதியான வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று தெரிவித்த மைக்கேல் பசேல் ஜெரியா, இந்த மரண தண்டனையை அமுலாக்குவதற்கான திட்டங்களும் இவ்வாறே கவலையளிப்பவையாக உள்ளன என்றும், அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--