Editorial / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுதல் நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, அமைச்சர் நேற்று (17) வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது எனத் தெரிவித்தார்.
"புதிய அரசமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி, வெறுமனே ஒரு பக்க வாத்தியம் தான்" என்று குறிப்பிட்ட அவர், அரசமைப்புப் பணிகள் ஆரம்பிக்காவிடின், இரா. சம்பந்தன் பதவி விலக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"புதிய அரசமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, சம்பந்தன் இராஜினாமா செய்தல் நலம். அதன் பிறகும் தொடர்ந்தால், அது பக்கவாத்திய ஊதல் தான்" என்று குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையின் தெற்குப் பகுதியை, "சிங்கள தேசம்" என வர்ணித்து, ஈழக் கோரிக்கையை, இரா. சம்பந்தன் கைவிட்டமையை, இலங்கையின் தெற்குப் பகுதி புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, அதை மதிக்கவுமில்லை எனத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
28 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
1 hours ago