Kamal / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கியத் தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அடுத்த வாரம் நிச்சயமாக அறிவிக்கப்படுவார் என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
இலகுவாக தேர்தலை வெற்றிகொள்ள ஐ.தே.முவில் இருக்கும் சகல கட்சிகளும் அமைச்சர் சஜித் பிரேமதாசவை கோருவதால் களமிறக்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், கட்சியின் வெற்றியை சிதைக்க வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை எனவும், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெற்றியையே விரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனான பேச்சுவார்த்தையில் சிறுபான்மை கட்சியுடன் பேசி தீர்மானிக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.
அதேபோல் கட்சிக்குள் சஜித் அணி, ரணில் அணி என்ற இரு குழுக்கள் இல்லையென தெரிவித்த அவர், வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்தினாலும் உரிய நேரத்தில் ஓட்டத்தை ஆரம்பித்து வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்றார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago