Editorial / 2026 ஜனவரி 29 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மிலன் பிரியதர்ஷன அருட் தந்தையைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு காவல்துறை அதிகாரிகளில் மூன்று பேர், வியாழக்கிழமை (29) அன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது புகார்தாரரான பாதியாரால் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பு கம்பஹா பிரதான நீதவான் சீலானி பெரேராவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது.
பின்னர் பிரதான நீதவான், மூன்று காவல்துறை அதிகாரிகளையும் தலா 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அருட் தந்தை மிலான் பிரியதர்ஷன பொலிசாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அருட் தந்தை மிலான் பிரியதர்ஷன பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (27)காலை நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக தெல்வத்தை சந்தியில் அருட் தந்தையர்கள் , அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர சபை முன்றலில் இருந்து நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி ஊடாக தெல்வத்தை சந்திக்கு பேரணியாக வந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருட் சகோதர சகோதரிகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர். பின்னர் அமைதியான முறையில் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .