Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்)
ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம்.
இன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா?
நான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago