Editorial / 2021 மார்ச் 10 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார்.
“சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார். அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் விசாரித்துள்ளனர்” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஆனால், வைத்தியசாலைக்குச் சென்றமை தொடர்பில் ஹக்கீமிடம் விசாரித்தபோது, பிறந்த குழந்தையொன்றை பார்ப்பதாகவே சென்றதாக பதிலளித்துள்ளார். ஹக்கீம் மட்டுமே, புதிதாய் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்குச் சென்ற ஒருவராவார்” என்றார்.
7 minute ago
33 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
55 minute ago
1 hours ago