Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையர்களில் மூவருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதென, சுகாதாரச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களில் ஒருவருக்கு 41 வயதென்றும் இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரென, சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, 37 வயதுடைய இன்னொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர், இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் மட்டக்களப்பு - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் மய்யத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.
இவர் தற்போது, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பணிப்பாளர் நாயகம் கூறினார்.
43 வயதுடைய மற்றைய கொரோனா நோயாளியும், கந்தக்காடு மய்யத்திலிருந்தவர் என்றும் அவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த ஜாசிங்க, இதுவரையில் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளதென்றார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025