Editorial / 2020 ஜனவரி 01 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்துள்ள 2020ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக சர்வசன வாக்குறுதி நடைபெறலாம் என, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
தற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்குள் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.
அதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் கூறியிருந்தது
மாகாண சபை தேர்தல்கள்
2017 ஆம் ஆண்டின் 17 ஆம் திகதி மாகாண சபை தேர்தல்கள் (திருத்தம்) சட்டம் கடந்த அரசாங்கத்தின் போது நிறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முன்மொழியப்பட்டது.
இருப்பினும், மசோதாவின் படி, மாகாண சபை தேர்தல் அறிக்கை இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை.
எனினும், இந்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026