2021 மார்ச் 08, திங்கட்கிழமை

முடக்கப்பட்ட, முடக்கப்படாத பிரதேசங்களின் விவரம்

S. Shivany   / 2020 நவம்பர் 29 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளை நாளை (30) காலை 5.00 மணியுடன் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக சில பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, கரையோரப்பகுதி, புறக்கோட்டை ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து நாளை அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன், மோதரை, புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், வெல்லவீதி, வாழைத்தோட்டம, மருதானை, கொம்பனித்தெரு, பொரலை ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்ட பகுதிகளாக தொடர்ந்து இருக்குமென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

புதிதாக நாளை முடக்கப்படும் பகுதிகளாக, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி- ரன்திய உயன வீட்டுத் தொகுதி மற்றும் பெர்கியுசன் தெற்கு பகுதி, வெல்லவீதிய பொலிஸ் பிரிவில்- லக்சந்த உயன, சாமல் கிராம பிரிவு, விஜயபுர கிராம பிரிவு 

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் முடக்க நிலையில் இருந்து நீர்கொழும்பு, ராகம ஆகிய பகுதிகள் தளர்த்தப்பட்டு, வத்தளை, பேலியகொட, களனி ஆகிய பகுதிகள் நாளை காலை 5.00 மணியுடன் முடக்கப்படவுள்ளன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .