2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

யாழில் கொரோனா கிடுகிடுவென அதிகரிப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை - பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு 1003 மாதிரிகள் நேற்று (7) பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில், 129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

“இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது" என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X