Editorial / 2017 மே 28 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 151ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) மாலை அறிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 111 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 71 பேர் இரத்தினபுரியிலும் 47 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 9 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.
இந்த அனர்த்தங்கள் காரணமாக, 112,565 குடும்பங்களைச் சேர்ந்த 4438,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 250 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,785 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago