2021 மார்ச் 08, திங்கட்கிழமை

MCCக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர்  புவனேக அலுவிஹார செயற்படவுள்ளார்.

எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, காமினி அமரசேகர ஆகிய  உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏனைய உறுப்பினராக செயற்படவுள்ளனர்.

குறித்த மனுக்கள் நாளை மறுநாள் (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .