Kogilavani / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொட வலவ்வ தோட்டத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளர்களுக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள், நேரடியாக சென்று இன்று (16) அஞ்சலி செலுத்தினர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளர் கல்யாணகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் சென்றிருந்தனர்.
இதேவேளை உயிரிழந்த குடும்பத்தினருக்கும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற குடும்பத்தினருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.





52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago