2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜீத் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, ரோஸி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, மங்கள சமரவீர மற்றும் கரு ஜயசூரிய உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பேரணியாக நாடாளுமன்ற வளாகம் வரையில் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது குடும்ப ஆட்சியினை வலியுறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட பதாதையினை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியுள்ளமை, உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட காட்சிகளை படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .