2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த மாதத்தில் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ள இலங்கை வீரர்கள்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசாங்கமானது அனுமதியளிக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி இலங்கை வீரர்கள் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில், உயிரியல் பாதுகாப்பான சூழலியே பயிற்சி பெறத் திட்டங்கள் காணப்படுவதுடன், வேகப்பந்துவீச்சாளர்களே முதலாவது தொகுதி வீரர்களாக பயிற்சிக்குத் திரும்பவுள்ளனர்.

அந்தவகையில், இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவருடன் கடந்த வாரம் இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே மேகூறப்பட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல்களில் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் மட்டத்தினர், உதவிப் பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா, தேர்வுக் குழுத் தலைவர் அசந்த டி மெல், இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவ நிபுணர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், அடுத்த மாதத்தின் முதல் 20 நாள்களுக்கு பின்னர் தாங்கள் முழுக் குழாமையையும் பயிற்சிக்கு திரும்ப எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த மிக்கி ஆர்தர், ஹம்பந்தோட்டை அல்லது கண்டிக்கு ஒரு வாரம் செல்லலாம் எனக் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--