2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற  இலங்கை மற்றும் இந்திய  அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணி சார்பாக தினேஷ் கார்த்திக் 66 ஒட்டத்தை பெற்றார்.இலங்கை அணி சார்பாக கப்புஹேதர ஆட்டமிழக்காமல் 55 ஒட்டத்தை பெற்றார்.

இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X