2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

ஆசிய கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்: யுவராஜ் சிங் நீக்கம்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்திற்கான ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
 
யுவராஜ் சிங் அண்மையில் நடைபெற்று முடிவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 5 போட்டிகளில் 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டிருந்த அதேவேளை, இந்த ஆண்டில் நடைபெற்ற 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில்  96 ஓட்டங்களை  யுவராஜ் சிங் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
யுவராஜ் சிங் தொடர்ச்சியாக பிரகாசிக்கத் தவறிய காரணத்தினாலேயே அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
 
இதேவேளை, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
 



  Comments - 0

  • hfghgnn Thursday, 10 June 2010 09:07 PM

    தூக்கினா நல்லதுதான் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X