Editorial / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் ஆர்.பி லெய்ப்ஸிக், பொரூசியா டொட்டமுண்ட் ஆகியன வென்றன.
தமது மைதானத்தில் நடைபெற்ற யூனியன் பேர்லினுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றது.
ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, திமோ வேர்னர் இரண்டு கோல்களையும், மார்செல் சபிட்ஸர் ஒரு கோலையும் பெற்றனர். யூனியர் பேர்லின் சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியுஸ் புட்லர் பெற்றார்.
இந்நிலையில், அகஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட் மூன்று கோல்களையும், ஜூலியன் பிரான்ட், ஜடோன் சஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். அகஸ்பேர்க் சார்பாக, புளோரியன் நைடெர்லெச்னர் இரண்டு கோல்களையும், மார்கோ றிச்டர் ஒரு கோலையும் பெற்றனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago