2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

இத்தாலிய சீரி ஏ: தோற்ற நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2020 ஜூலை 30 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், கைகரியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது. கைகரி சார்பாக, லூகா கஜிலியானோ, ஜியோவனி சிமியோன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, டொரினோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் றோமா வென்றிருந்தது. றோமா சார்பாக, எடின் டெக்கோ, கிறிஸ் ஸ்மோலிங்க், அமடெள டியாவரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொரினோ சார்பாக, அலெஜான்ட்ரோ பெரெங்குயர் றெமெய்ரோ, வில்ஃபிரைட் சிங்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிறெஸ்ஸியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றிருந்தது. லேஸியோ சார்பாக, ஜோக்கின் கொரெரே, சிரோ இம்மொபைலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, சம்ப்டோரியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றிருந்தது. ஏ.சி மிலன் சார்பாக, ஸல்டான் இப்ராஹிமோவிச் இரண்டு கோல்களையும், ஹகன் கல்ஹனொக்லு, றஃபேல் லெயோ ஆகியோர் தலா ஒவ்வ்வொரு கோலையும் பெற்றனர். சம்ப்டோரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டோஃபர் அஸ்கில்ட்சென் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .