2020 ஜூன் 04, வியாழக்கிழமை

இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார் ஸவ்ரேவ்

Editorial   / 2019 மே 15 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியுடன், உலகின் ஐந்தாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்று  இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் மட்டியோ பெர்ரென்ட்டினியை எதிர்கொண்ட அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 5-7, 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் அன்டரயா பஸோவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெலாரஸின் விக்டோரியா அஸரெங்காவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 6-4, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அஜ்லா டொம்ல்ஜனோவிச்சை எதிர்கொண்ட உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஸ்லோவாக்கியாவின் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் அலிஸே கொர்னெட்டை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்யானா சபலெங்கா, 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X