2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இந்தியா எதிர் இங்கிலாந்து: நான்காவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 03 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியானது அஹமதாபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கின்ற நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை இங்கிலாந்து கட்டாயம் வென்றாகவேண்டிய நிலையில் காணப்படுகிறது.

மறுபக்கமாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இப்போட்டியை இந்தியா வெல்ல அல்லது வெற்றி தோல்வியின்றி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்போட்டியை வென்றால் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மா, அணித்தலைவர் விராட் கோலியின் பெறுபேறுகளிலேயே போட்டியின் தன்மை தங்கியுள்ளதுடன், இங்கிலாந்துப் பக்கம் அணித்தலைவர் ஜோ றூட், ஜொனி பெயார்ஸ்டோ, ஒலி போப், பென் ஸ்டோக்ஸின் பெறுபேறுகளில் இங்கிலாந்தின் வெற்றி தங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .