2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

இன்டர் மிலனை வென்ற நாப்போலி

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நாப்போலி வென்றுள்ளது.

இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கி நாப்போலியின் முன்களவீரர் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் செலுத்திய பந்தானது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

பின்னர் முதற்பாதி முடிவில், நாப்போலியின் மத்தியகளவீரர் பியோத்தர் ஸிலென்ஸ்கி கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய உதையை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் டேனியல் படெல்லி தடுத்திருந்தார்.

இந்நிலையில், சக பின்களவீரர் ஜியோவனி டி லொரென்ஸோவிடம் பந்தைப் பரிமாறிக் கொண்டுவந்த நாப்போலியின் மத்தியகளவீரர் பேபியன் ரூய்ஸ் பெற்ற அபார கோல் காரணமாக நாப்போலி முன்னிலை பெற்றது.

பின்னர் போட்டியின் இறுதி நிமிடங்களில், மாற்றுவீரராகக் களமிறங்கிய இன்டர் மிலனின் பின்களவீரர் டனிலோ டி அம்புறோசியா கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்தை நாப்போலியின் கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினார் தடுத்த நிலையில், இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று நாப்போலி காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--