2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாதனை

Editorial   / 2017 ஜூலை 02 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிது ஹஸரங்க, ஹட்-ட்ரிக் ஒன்றை எடுத்து, சாதனை படைத்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில், தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட வனிது, போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்-ட்ரிக் ஒன்றைக் கைப்பற்றினார். இதன்மூலம், சிம்பாப்வே அணி 155 ஓட்டங்களுக்கே வீழ்த்தப்பட்டது.

தனது அறிமுகப் போட்டியிலேயே ஹட்-ட்ரிக் சாதனை படைத்த வனிது, இவ்வாறு அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஹட்-ட்ரிக் சாதனை படைத்தவராக, பங்களாதேஷின் தைஜுல் இஸ்லாம், தென்னாபிரிக்காவின் கஜிஸ்கோ றபடா ஆகியோருடன் இணைந்து கொண்டார்.

19 வயதான வனிது ஹஸரங்க, காலி றிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த வீரராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X