2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சண்றைசர்ஸ் ஹைதரபாத்தின் தலைவராக வில்லியம்சன்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்தியமையடுத்தைத் தொடர்ந்து சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவர் பதவியிலிருந்து டேவிட் வோணர் பதவி விலகியமையைத் தொடர்ந்தே சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சண்றைசர்ஸ் ஹைதரபாத் சண்றைசர்ஸ் அணிக்கு, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் ஆகியோரை அணித்தலைவராக தெரிவுசெய்யும் வாய்ப்புகள் காணப்பட்டபோதும் கேன் வில்லியம்சனை அணித்தலைவராக தெரிவு செய்திருந்தது.

அதுவும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக கடந்த மூன்று பருவகாலங்களில் விளையாடிய கேன் வில்லியம்சன், 15 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்ததுடன், 100 பந்துகளுக்கு 129.24 ஓட்டங்கள் என்ற விகிதத்தில் 411 ஓட்டங்களையே பெற்ற கேன் வில்லியம்சனை அணித்தலைவராக சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி தெரிவுசெய்தது கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கில் விளையாடுவதற்கு டேவிட் வோணருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டேவிட் வோணருக்குப் பதிலாக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவை ஒப்பந்தம் செய்வதற்கு அவரை சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி அணுகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் இடம்பெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்திருந்த நியூசிலாந்தின் விக்கெட் காப்பாளர் லுக் றொங்கியும் இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக் ஏலத்தில் விலை போயிருக்காத நிலையில் அவரையும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணருக்குப் பதிலாக ராஜஸ்தான் றோயல்ஸ், சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் ஒப்பந்தம் செய்ய முயலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .