Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 37 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் யுனைட்டெட் காணப்படுவதுடன், 35 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. எனினும், யுனைட்டெட்டை விட சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 35 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் அவ்வணி மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது. நான்காமிடத்தில் 34 புள்ளிகளுடன் லிவர்பூல் காணப்படுகின்றது.
23 minute ago
42 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
51 minute ago
56 minute ago