2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

செல்சிக்குச் செல்கிறாரா ஹலான்ட்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்களவீரரான எர்லிங்க் பிறோட் ஹலான்டைக் கைச்சாத்திடுவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

20 வயதான ஹலான்ட்டை 75 மில்லியன் யூரோக்களைச் செலுத்துவதன் மூலம் கைச்சாத்திடுவதை அடுத்தாண்டு வரை செயற்படுத்த முடியாது என்ற நிலையிலேயே செல்சி இவ்வாறு முயல்கிறது.

ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கிலிருந்து டொட்டமுண்டால் கடந்தாண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹலான்ட், 26 போட்டிகளில் 25 கோல்களை டொட்டமுண்டுக்காக பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .