Shanmugan Murugavel / 2021 ஜனவரி 20 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 134 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே, நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை லபுஷைன் அடைந்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 229 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், 11ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான குறித்த டெஸ்டில் 81 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, இந்தியாவுக்கெதிரான குறித்த டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
8 minute ago
13 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
53 minute ago
1 hours ago