Editorial / 2018 ஜனவரி 24 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஸ்கேவியர் மஷரானோ, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து விலகவுள்ளதுடன், சீன சுப்பர் லீக் அணியான ஹெபெய் சைனா போர்ச்சுனேட் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிடமிருந்து 17 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கேவியர் மஷரானோ இவ்வாரம் பார்சிலோனாவை விட்டு விலகவுள்ளார்.
பார்சிலோனாவுக்காக 334 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்ற ஸ்கேவியர் மஷரானோ, நான்கு லா லிகா பட்டங்களையும் இரண்டு சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் பார்சிலோனாவில் வென்றிருந்தார்.
11 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago